Introducing Examless Evaluations!

We all know the routine -

Study well,
Get good marks,
Get into a reputed institution and

after that,

maybe, just maybe, Pursue your Dreams.


But, we are here to break that stereotype!

For, not everyone likes taking up tests, and being forced to learn what they don't like! Which is why we have introduced "Examless Evaluations" in the fifteen-year history of Zoho University. In which you will be allowed to showcase your skills and talent based on which we will evaluate you and give you a chance to study at our university, without having to go through our traditional screening process.


So, how do I showcase my talent, you ask?

You might be a creative writer who has written a bunch of blogs and have posted it on Medium or Blogger or Wordpress; you might be someone who likes to draw - pencil sketching, water colour painting, digital sketching etc; or may be you like coding and developing an app or mini-software! If that's the case, bring them to us! We won't load you with tests and evaluations, we will rather provide you a peaceful environment where you'll get to demonstrate your work, and answer questions about it.


Do remember that this is not for every student out there, as we give you the green card only if we see passion brimming in your eyes and heart! Send us your handiwork (links, attachments, photos) to admissions@zohouniversity.com with subject line - Examless, we will evaluate them and invite you over for a face-to-face interview if your profile intrigues us. If everything works out, who knows! You could become a full-time Zoho employee right after you successfully complete your course here at our Zoho University!


So what are you waiting for?

Our doors are always open for budding aspirants like you!

நம் அனைவருக்கும் தெரிந்த வழக்கம் இது

நன்றாக படிக்க வேண்டும்,

நல்ல மதிபெண்களை பெற வேண்டும்,

புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் சேர வேண்டும்,

அதன்பிறகு முடிந்தால்,

ஒருவேளை முடிந்தால் மட்டுமே, நம் கனவுகளைத் தொட நினைக்கலாம்.

காலங்காலமாக தொடரும் இந்த வழக்கத்தை மாற்றவே நாங்கள் இங்குள்ளோம்!
தேர்வுகளையே தன் வாழ்வின் எதிர்காலமாக நினைத்து பாடுபடுவதையோ; தனக்கு பிடிக்காத, தன்மேல் திணிக்கப்பட்ட ஒரு பாடத்தை படிப்பதையோ அனைவரும் விரும்புவதில்லை!
அதனாலேயே, Zoho பல்கலைக்கழகத்தின் 15 வருட வரலாற்றில் முதல் முறையாக, நாங்கள் "தேர்வில்லா திறனாய்வு" திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் எங்களது வழக்கமான தேர்வுகளை கடந்து வருவதற்கு பதிலாக, நீங்கள் உங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். நாங்கள் உங்கள் திறமையை ஆய்வு செய்து, அதன் மதிப்பைப் பொறுத்து, எங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

"எப்படி என் திறமையை வெளிக்காட்டுவது?" 
என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஒருவேளை ஒரு நல்ல கற்பனை திறன் படைத்த எழுத்தாளராக இருந்து, Medium, Wordpress, அல்லது Blogger போன்ற வலைதளங்களில் உங்களது படைப்புகளை வெளியிட்டிருக்கலாம்; அல்லது நீங்கள் வரைகலையில் (பென்சில்/பேனா கொண்டு வரைதல்(Pencil sketching), வண்ணங்களைக் கொண்டு அழகிய ஓவியங்களை உருவாக்குதல்(Water color painting), கணினி மென்பொருளை சிறப்பாக பயன்படுத்தி வரைதல்(Digital sketching), மற்றும் பல) தேர்ச்சி பெற்றவராய் இருக்கலாம்; அல்லது நீங்கள் Coding-இல் ஆர்வம் கொண்டு ஒரு செயலியையோ (app) அல்லது ஒரு சிறிய மென்பொருளையோ கூட உருவாக்கிக் கொண்டிருக்கலாம்! அப்படிப்பட்ட திறமையானவராய் இருந்தால் உங்கள் படைப்புகளை எங்களிடம் காண்பியுங்கள்! உங்களுக்கு தேர்வுகளைத் தரமாட்டோம்; ஆனால், ஒரு நல்ல அமைதியான சூழல் தந்து உங்கள் படைப்புகளைக் காண்பிக்கவும், அதை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவும் வாய்ப்பு தருவோம்.


இது சாதரணமாக எந்த ஒரு மாணவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் கண்களிலும், உள்ளத்திலும் மிளிரும், திறனுடன் கூடிய ஆர்வமே உங்களுக்கு இந்த சிறப்பான வாய்ப்பைத் தரும். உங்கள் படைப்புகளை (இணைய இணைப்பு (links), மின்னணு புகைப்படங்கள் (Digital photos), அல்லது மற்ற இணைப்புகளாகவோ (Attachments) எங்களுக்கு admissions@zohouniversity.com 
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, “Examless” என்ற தலைப்பில் அனுப்புங்கள்; உங்கள் படைப்புகளை ஆராய்ந்த பிறகு அவை எங்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தால், உங்களை ஒரு நேர்காணலுக்கு அழைக்கிறோம். எல்லாம் நன்றாக நடந்தால், நீங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பயின்று, உங்கள் திறனுக்கேற்றபடி Zoho-வில் ஒரு முழுநேர வேலையைப் பெறலாம்!


எதற்காக காத்திருக்கிறீர்கள்?
உங்களை போன்ற மலரும் திறமைசாலிகளுக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்!